Wednesday, February 28, 2018
Peepingtom - 60களின் ஒரு தலை சிறந்த திரைப்படம்
Posted under Camera buff, Michael Powell, Peepingtom, உலகசினிமா, கலை on 3:31 PM by அத்தியா with
No comments
Saturday, January 6, 2018
நினைவுகள் யாவும் கண்ணீரின் தடையங்கள்
Posted under Wongkar wai, உலகசினிமா, கலை, சினிமா on 4:22 AM by அத்தியா with
2 comments
Wednesday, December 27, 2017
உலகசினிமா அறிமுகக் குறிப்புகள் : 3
Fatih akin திரைப்படங்களில் எனக்கு பிடித்தமான ஒன்று Solino(2002).
இத்திரைப்படம் இயக்குனர் Tornatoreவின் "Cinema paradiso" மற்றும்
இயக்குனர் kieslowskiயின் "Camera buff" திரைப்படங்களை வெகுவாக நினைவூட்டிக் கொண்டிருந்தது.
வழக்கமாக தன்
படங்களில் நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்து வசிக்கும் மக்களின் வாழ்வியலை
காட்சிப்படுத்துவது இப்படத்திலும் தவற விடப்படவில்லை.
இரு
சகோதரர்களுக்கிடையிலான அன்பு எனும் நிலையை தாண்டி
பொறாமையுணர்வெழுச்சிகளும், அந்த பொறாமையின்
உந்துதலில் மேற்கொள்ளும் தவறுகளும் குற்றவுணர்வுகளை கடக்கும் மனநிலகளும்
விரவிக்கிடக்கின்றது.
நீண்ட நாள்
குடும்பத்திற்காக உடலுழைத்து திடீரென நிகழ்ந்த ஏமாற்றத்தை விழுங்க முடியாமல் சொந்த
நாட்டிற்கு திரும்பிய தாயின் தனிமைக்கு முன்னுரிமை அளித்து தன் கனவுகளை
அடக்கிக்கொள்ளும் மகனின் அந்த மெல்லுணர்வு
தான் அவன் ஒரு கலைஞன் என்பதற்கான சான்றாக தென்பட்டது.
திரைப்பட
இயக்குனராக வேண்டிய வெறி வறுமையுடனும் இருந்தது.
"Fire
and passion"இறுதிவரை
அவனுக்குள் எரிந்து கொண்டே.
Solino (2002)
Director Fatih Akin
திருமண, மற்றும் குடும்பக்கட்டமைப்பின் மீதான பல்வேறான விமர்சனங்களை எவ்வளவுதான் விவாதித்தாலும் அது சார்ந்து தீர்க்கமான முடிவை மேற்கொள்வதில் பலரும் தோற்றே போய்விடுகின்றனர்.
குடும்பக்கட்டமைப்பு பலருக்கு பாரம்பரிய பாதுகாப்பான வாழ்க்கை முறையாக இருந்தாலும் அது பொருளாதார ரீதியல் பல்வேறு நெருக்கடிகளை வழங்குவதோடு தனிமனித சுதந்திரத்தை பறித்து விடுவதும் நாம் அறிந்ததே.
உண்மையில் நாம் வாழும் சூழலில் காமத்தை அவ்வளவு எளிதில் பருகிவிட்டு கடந்து விட முடியாது.கலாச்சார மாயைகளாலும் திருமணம் என்னும் கட்டமைப்பாலும் அது இறுக்கி கட்டப்பட்டிருக்கிறது.சில பல காதல்,காமங்களை கடந்த பின் இருவர் தங்களுக்கான நீண்டகால அல்லது குறுகியகால உறவை அமைத்துக்கொள்ளவதற்கான அடுத்தகட்டத்திற்குள் நுழையலாம்.
ஆனால் எவ்வளவுதான் தெளிவிருந்தாலும் குடும்ப திணிப்பிற்குள் சிக்குண்டு சீரழிகிறது.இன்னும் தனிமையும் வெறுமையும் மனிதனை உணர்வுரீதியாக எங்கெங்கோ கொண்டு சென்றும் விடுகின்றது.
இந்த இறுக்கமான குடும்பக்கட்டமைப்பு மற்றும் காமத்தின்பால் செல்லும் உடல் பங்கீடு நம்மை பதைபதைப்புகளுக்குள்ளாக்குகிறது.
இன்னும் இந்த உடல் பங்கீட்டின் விளைவால் வன்மங்களும் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய திருமணக்குடும்பக்கட்டமைப்பையே அப்பட்டமாக விமர்சிக்கும் வகையில் மனிதனது சிக்கலான அக உணர்வுகளையும் அதன் வெளிப்பாடுகளையும் எளிய மனிதர்களின் வாழ்வியலைக் கொண்டு நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் உருவாக்கப்பட்ட திரைப்படம் “Revelations”.
இந்த திருமண உறவு ,குடும்பக்கட்டமைப்பு விவகாரத்தை அணுகும் இயக்குனர்கள் மீது ஒரு தனி மரியாதை உண்டு.ஏனெனில் இதனை அவ்வளவு எளிதாக போகிற போக்கில் தெரிந்த கேள்விப்பட்ட சம்பவங்களையெல்லாம் வைத்துக்கொண்டு படத்தை வடிவமைத்து விட முடியாது. இவ்வாறன உணர்வுகளை நுணுக்கமாக காட்சிப்படுத்த அவ்வளவு முதிர்ச்சி வேண்டும்.நீண்ட நாட்களின் பின் உலகத்தர தமிழ்ப்படம் ஒன்றை பார்த்து மனம் முழுவதும் நெகிழ்ந்திருக்கிறேன்.
திரைப்படத்தின் இயக்குநர் விஜய் ஜெயபால் “திரைமொழியின் தீராக்காதலன்” என்றுதான் சொல்வேன்.
அத்தனை பெரிய விடயங்களை நுணுக்கமான காட்சிகள் மூலம் அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.
இவர்தான் கலைஞன்.
ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு மொழி.
இந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் கொண்டு தமிழ் சினிமா திரை மொழியை கற்றுக்கொள்ள முயற்சி செய்யலாம்.
திடீரென நிகழ்ந்துவிடும் குற்றங்களும் அக்குற்றங்களை சரி செய்ய மேற்கொள்ளும் பிரயத்தனங்களும்தான் மனித உணர்வின் அடிப்படை.
அத்தகைய மனிதனித உணர்வை அவ்வளவு நுணுக்கமாக ஆய்வு செய்திருப்பார் இயக்குநர்.
மனதின் இருண்ட பக்கங்கள் அழகாக வெளிக்கொணரபட்டிருக்கும்.
என்னைப் பொறுத்தவரை பெண்களின் பாலியல் தேவையை ஒரு புறம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ஆண்களின் அக உளச்சிக்கலையும் கேள்விக்குட்படுத்தியிருப்பார்.
கதையில் புதைந்திருக்கும் ஒவ்வொரு மர்மமும் அதன் போக்கில் இலகுவாக அவிழ்க்கப்படுவது கூடுதல் சுவாரஷ்யம்.
இன்னும் படம் பார்த்து முடியும் வரை ஒரு சிறு சோர்வோ உங்களைத்தாக்கிவிடாது.
பிரதான நான்கு கதாப்பாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட இப்படம் நடிகர் தேர்வுகளையும் சிறப்பாகவே செய்துள்ளது என்றுதான் சொல்வேன். "சேத்தன்” சின்னத்திரையில் நமக்குப்பழக்கமானவர். அந்த குற்றவுணர்வுகேற்ற எளிமையான முகம்.யதார்த்தத்தை புலப்படுத்துவதில் ஒரு சோகமான பார்வையில் நம்மை விழுங்கி விடுவார்.
அடுத்து “லக்ஷ்மி ப்ரியா” கண்களால் பேசும் ஒரு எளிமையான அம்சமான நடிகை.
பிற பாத்திரங்கள் பெரிதாக அறிமுகமில்லாமல் இருந்தாலும் நடிப்பில் சொதப்பிவிடவில்லை.
கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லாததாலும் தமிழ்ப்படம் என்பதாலும் படத்தின் ஒரு காட்சியை கூட விவரிக்கவில்லை.படத்தைப் பார்த்து நெகிழ்ந்து கொள்ளுங்கள்.
வழக்கம் போலவே தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்ட கலைஞனாகவே இயக்குனரும் இருக்கிறார்.
Netflix இல் பார்க்கலாம்.
Revelations(2016)
Director: Vijay Jayapal
மனித உறவு மற்றும் உணர்வுகளை நுணுக்கமாக கண்டு பிடிக்க முயற்சி செய்யும் காவியம் என்றே சொல்லலாம்.
புனைவுதான் என்றாலும் கதையில் தர்க்க பிழைகள் ஏதுமில்லை.
படத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை காட்சிப்படுத்தும் அதே வேளை இரு மனிதரின் காதல் உணர்வின் வெளிப்பாட்டை காட்சிப்படுத்த இரு மான்களின் காதல் கனவில் குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
நடிகையின் இயல்பு தற்காலத்திற்கு பொருத்தமற்று விசித்திரமான ஒன்றாக நமக்கு தோன்றினும் தனிமனித உணர்வு,
அவர்களின் வாழ்வியல் பின்புலத்தையும் தனித்துவத்தையும் ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
இருவரின் ஒருமித்த கனவு மற்றும் செயற்பாடுகள் நிகழும் போது மெதுவாக ஒரு சந்தத்துடன் தனக்கான உடலும் ஆன்மாவும் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது.
'கனவு' மனித ஆன்மாக்களின் அந்தரங்கமான வெளிப்பாடு.
'தூக்கம்' ஆன்மாக்களின் தேடல்களை அரங்கேற்றம் செய்யும் இடம்.
நிஜத்தில் ஆன்மாக்கள் ஒன்றிணையும் போது கனவுகளுக்கு இடமில்லாமலே போய் விடுகிறது.
On body and soul (2017)
Director:Ildiko Enyedi
On body and soul (2017)
புனைவுதான் என்றாலும் கதையில் தர்க்க பிழைகள் ஏதுமில்லை.
படத்தில் இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை காட்சிப்படுத்தும் அதே வேளை இரு மனிதரின் காதல் உணர்வின் வெளிப்பாட்டை காட்சிப்படுத்த இரு மான்களின் காதல் கனவில் குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
நடிகையின் இயல்பு தற்காலத்திற்கு பொருத்தமற்று விசித்திரமான ஒன்றாக நமக்கு தோன்றினும் தனிமனித உணர்வு,
அவர்களின் வாழ்வியல் பின்புலத்தையும் தனித்துவத்தையும் ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.
இருவரின் ஒருமித்த கனவு மற்றும் செயற்பாடுகள் நிகழும் போது மெதுவாக ஒரு சந்தத்துடன் தனக்கான உடலும் ஆன்மாவும் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறது.
'கனவு' மனித ஆன்மாக்களின் அந்தரங்கமான வெளிப்பாடு.
'தூக்கம்' ஆன்மாக்களின் தேடல்களை அரங்கேற்றம் செய்யும் இடம்.
நிஜத்தில் ஆன்மாக்கள் ஒன்றிணையும் போது கனவுகளுக்கு இடமில்லாமலே போய் விடுகிறது.
On body and soul (2017)
Director:Ildiko Enyedi
Monday, October 30, 2017
உலகசினிமா அறிமுகக் குறிப்புகள் : 2
The Edge Of Heaven
மரணம் ஒருவகை பிறப்பு.
ஒருவரது மரணம் மற்றுமொருவரில் எத்தகைய
தாக்கத்தத்தை ஏற்படுத்துகின்றதென்றால், அவரை தட்டி எழுப்புவது மட்டுமல்லாமல்
வாழ்க்கைக்கான ஒரு ஆணித்தனமான நோக்கத்தை விடாப்பிடியான முனகலுடன்
வழங்கிவிடுகின்றது.
எவரும் எதிர்பாரமால் செய்யும்
தவறுகளும் அதனால் ஏற்படும் குற்றவுணர்வுகளும் அத்தவறை சரி செய்து குற்றவுணர்வை
நீக்க மேற்கொள்ளும் பிரயத்தனங்களும்தான் மனித மனங்களுக்கே என்றும் உரித்தானவை.இந்த
“குற்றவுணர்வை சரி செய்தல்”என்னும் உணர்விழை ஒவ்வொரு மனிதனுக்குப்பின்னாலும்
ஓடிக்கொண்டிருக்கும்.
உடல்,நிறம்,நாடு,மொழி,இனம்,மதம் இவற்றால் வேறுபட்டவர்களாக இருந்தாலும்
அனைவரையும் இணைத்துவிட ஓர் உணர்வுப்புள்ளி போதுமானது.
நன்கறிந்தவரையே சாதாரணமாக
புறக்கணித்துவிடும் பிறரது உணர்வானது,முன் பின் பாரதூரமாக அறியப்படாதவரால்
நுண்ணுணர்வுகளுக்கு வழங்கப்படும் முன்னுரிமை பெரும்பாலும் அசாத்தியமானதாக
இருந்தாலும் சில தருணங்களில் சாத்தியமானதுதான்.அத்தகையை சில தருணங்களையும்
மனிதத்தின் ஆழமான உணர்வு வெளிப்பாடுகளையும் ஒருங்கே கொண்டமைந்தது “The Edge Of Heaven”.
பன்மைத்துவ கலாச்சாரம் மற்றும்
உலமயமாக்கலின் விளைவு போன்றவைகள்,அரசுசார் ஆக்கிரமிப்புகள் தனிமனித வாழ்க்கையில் தாக்கம்
செலுத்துகையில், அவர்களுக்கே உரித்தானவைகளை இழக்க நேரிடும்போது அதை எவ்வாறு அவர்கள்
எதிர்த்து சமாளித்து தன்பக்கத்தை தாங்கிக்கொள்கிறார்கள் என்பதை எளிமையான காட்சி
நடைகள் மூலம் காண்பிக்கும்.
வளர்ந்து வரும் ஐரோப்பா முழுவதும்
“பன்முக கலாச்சாரவாதம்” எழுச்சிக்குட்பட்டிருக்கையில் ஏற்படும் பதட்டம் மற்றும்
ஒருங்கிணைந்த நாடான ஜெர்மனியில் குடியேற்றத்தின் விளைவால் அதன் மக்கள் தொகையின்
அதிகரிப்பு போன்றவைகள் இடையிடையே படம் பேசிச்செல்லும்.
இக்கதையினூடே மதம் தொடர்பான
சிக்கல்களும் சொல்லப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.குறிப்பாக துருக்கிய
ஜெர்மானியர்கள் சிலரின் இஸ்லாமிய தீவிரப்போக்கு,தனி நபர் அடக்குமுறைகள் என்பன பாரிய
வன்முறையாகவே தென்பட்டன.இவ்வாறான அடக்குமுறை பெரும்பாலும் நாம் அறிந்ததே.பிறந்த
நாட்டை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெய்ரந்தவர்கள், குடியேறியவர்கள்
பன்மைத்துவ கலாச்சார மற்றும் நாகரீகங்களினுள் உள்வாங்கப்படும் போது அதனை
ஏற்றுகொள்ள மறுப்பது.இன்னும் பாரம்பரிய அடையாளங்களை பேணுவதில் அதீத கவனம்
செலுத்துவது.அதிலும் பெண்கள் தான் பாரியளவில்அடக்கி ஒடுக்கப்படுவது போன்ற
விடயங்கள் பேசப்பட்டிருக்கும்.
இத்திரைப்பட இயக்குநர் பதிஹ் அகின் (Fatih Akin) இன்
மற்றுமொரு திரைப்படமான “Head-on”(2004)
இவ்வாறன அடக்குமுறையை வேறு பாணியல் வேறு வகையான
உணர்வெழுச்சிச்சிகளைக்கொண்டு ஆழமாக பேசிச்செல்லும் தவற விடக்கூடாத திரைப்படம்.
“The Edge Of
Heaven” திரைப்படம் கதையை விட கதாப்பத்திரங்களுக்கு
முன்னுரிமை அளிப்பதற்கான காரணம் பின்னிப்பூட்டப்பட்ட கதையாடல்.இது ஒரு சிறந்த Hyperlink Movieக்கான
அணுகுமுறை என்று கூட சொல்லலாம்.நிச்சயமாக இயக்குநர்”Alejandro Gonzalez Inarritu” வின் Babel,21grams,Amores
perros போன்ற திரைக்கதை சொல்லும் பாணி இன்னும்
இயக்குநர் Wong Kar-waiயின் Fallen Angels
திரைக்கதை கூட நினைவுக்கு வரலாம்.
படத்தினுள் கதாப்பாத்திரங்கள்
கதைக்கருவின் இழைகளினூடாகமட்டுமே இணைகிறார்களே தவிர நேரடியாக யாரும் யாருடனும்
இணையவில்லை.
அங்கு அனைவரும் ஒரவரை ஒருவர் அறிந்து
அடையாளம் காணப்பட்டிருந்தால், அனைத்தும் சமநிலைக்கு கொண்டுவரப்பட்டு சுவாரஷ்யம் நீங்கி நடிப்பு
அர்த்தமற்று போயிருப்பதுடன் இயக்குநர் பார்வையாளருக்கு ஏற்படுத்த நினைக்கும்
உணர்வு இல்லாமலே போய்விட்டிருக்கும்.
படத்தின் ஒவ்வொரு நிகழ்வும் முன்னரே
தலைப்பிட்டு சொல்லப்பட்டிருக்கும்.உதாரணமாக Yeter’s Death என்னும் தலைப்பின் பின் படம்
நகரும்.முன்னதாகவே யத்தர் இறக்கப்போகிறாள் என்பது எமக்கு தெரியும்.இருந்தாலும் அது
எவ்வாறு நிகழப்போகின்றது என்பதற்கான துணுக்குகளை ஆராய்ந்தபடி சுவாரஷ்யம் குன்றாமல்
பார்த்துக்கொண்டிருப்போம்.அது போலவே Lotte’s Death என்னும் தலைப்பும்.
இது தவிர இரு பெண்களுக்கிடையிலான
உணர்வுப்பூர்வமான காதல் உருவாக்கம் மற்றும் அதன் ஏக்கம் என்பன பிரதான கருப்பொருளாக
தூக்கிப்பேசாமல் அதன் போக்கிலேயே நிகழ விடப்பட்டிருக்கும்.
இவ்வாறாக மனித மனதின் நுண்ணுணர்வுகள்,நாட்டின்
அரசியல் சிக்கல்கள்,புவியியல்காலநிலை மற்றும் தலைமுறை இடைவெளி போன்ற பல்வேறு அம்சங்களை
நுணுக்கமாக ஆராய்வதற்கு இயக்குநர் தவறவில்லை.
The Edge of
Heaven (2007 Turkish-German Drama)
Director :
FatihAkin
The dreamers
ரசனை மற்றும் சிந்தனைத்தளத்தில்
பெரும்பாலும் ஒருமித்து இருப்பவர்களுடன் நம்மை அறியாமலே எந்த அளவு நெருக்கமும்
ஈடுபாடும் கொள்கிறோம் என்பதை சிந்தித்துத்துப் பார்த்ததுண்டா?
இத்தகையவர்களுக்கு கருத்துமுரண்பாடுகள்
வரவே வராது என்றல்லாம் எந்தவித கட்டுப்பாடுகளும் கிடையாது.இவர்கள் கலைவிரும்பிகள்.அதே
நேரம் முரண்களின் காதலர்கள்.
ஒரு திரைப்படம் எந்தளவுக்கு நம்
ஆன்மாவை நெருங்குகின்றது என்பதில்தான் அந்த திரைப்படத்தின் உயிர்ப்பையும்
வெற்றியையும் எம்மால் நிர்ணயிக்க முடியும். “The dreamers” என்
ஆன்மாவை தொட்டது என்பதை விட என்னை பல இடங்களில் பிரதி பலித்தது என்றே கூறலாம்.நீண்ட நாட்களின் பின்
விநோதமாக ரசித்து நெகிழ்ந்து பார்த்த ஒரு திரைப்படம்.
“Film Buffs are sick people” (Francois Truffaut) என்னும் வாசகம் நான் அடிக்கடி நினைவுகூறிக் கொள்வது.இத்தகைய
“திரைப்பட ஆர்வலர்கள்” (Film buffs) என்னும் அடையாளம்
மட்டுமே இவர்களை ஒன்றிணைத்து விடுகிறது.திரைப்படத்தால் வெகுவாக கவரப்பட்டவர்கள்
பெரும்பாலும் தங்களது வாழ்வியலை, திரைப்படத்தின் கதாப்பாத்திரத்திற்குள்
நுழைந்து அதனை அனுபவிக்கும் மனோபாவம் எத்தகைய அலாதியானது? அத்தகையவர்களைத்தான்
நீங்கள் திரையில் பார்ப்பீர்கள்.
இத்திரைப்பட கதாப்பாத்திரங்கள் மிகவும்
ஆச்சர்யமூட்ட கூடியவர்கள். இவர்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடர்ச்சியாக
தங்களுக்கு பிடித்த திரைப்படங்களுடன் இணைத்துக் கொண்டு வாழ்கிறார்கள்.மேலும் அந்த
படங்கள் “சினிமா ஆர்வலர்களின்” வாழ்க்கையை தொடுவதில் எந்த அளவு வெற்றி
அடைந்துள்ளதோ அதே அளவு “The dreamers” திரைப்படமும்
வெற்றி அடைந்துள்ளது.
இந்த திரைப்படம் வெளியிடப்பட்ட
காலகட்டத்தில் கடுமையாகவும், மக்களுக்கு காண்பிக்கப்பட்ட ஒரு
குற்றமாகவுமே கருதப்பட்டது.இன்னும் MPAA (Motion Picture Association of
America) என்னும் அமைப்பால் இத்திரைப்படம்
கலைக்கப்பட்டதில் இருந்து சமூகம் எவ்வளவு குறுகிய மனப்பான்மையில் இருந்தது
என்பதற்கான தெளிவான ஒரு சாட்சியை எமக்கு முன்வைத்தும் விட்டது. இது ஒரு
அருவருப்பான படம் என்பதெல்லாம் மிகவும் அபத்தமான குற்றச்சாட்டு.
நாவலாசிரியரான Gilbert Adair இன் ”The holly innocents” என்னும் நாவலை
தழுவிய இத்திரைப்படத்தின் Screen play யும்
இந்நாவலாசிரியரால் எழுதப்பட்டது. இயக்குநர் “Bernardo Bertolucci” சகோதரர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையிலான பாலியலின் கடுமையான
பார்வையை பார்வையாளர்களிடம் கொடுத்து தேவையற்ற மெருகூட்டல்கள் இல்லாமல் இயல்பாக
இயங்க விட்டிருக்கிறார்.
மூன்று நபர்களும் கட்டமைக்கப்பட்ட
வாழ்க்கைக்குள்ளிருந்து அதை உடைப்பதற்கும் (Free Life) கட்டுப்பாடுகளற்ற
சுதந்திர வாழ்க்கையை எவ்வாறு நடை முறைப்படுத்தலாம் என்பதிலும் போராடுகிறார்கள்.
ஒரே எண்ணக்கருக்களைக்கொண்ட இரட்டையர்களுடன் இணையும் Matthew என்னும்
கதாப்பாத்திரம் எவ்வளவுதான் அவர்களுக்குள் நுழைய முயற்சித்தாலும் அவன் வேறு
ஒருவன்தான் என்னும் உணர்வு அவனை விட்டுவைக்கவில்லை. அந்த இரட்டையர்களின் உறவு
நிலையை பார்த்து அதிர்ச்சியுறும் Matthew உம் சரி
பார்க்கின்ற பார்வையாளர்களும் சரி அவர்களுடைய உறவை இன்ஸஸ்ட் (Incest) என்று எண்ணினால் அது அவர்களுக்கு பாரிய ஏமாற்றம் தான்.
மூன்றாவது நபரைப் பொறுத்தவரையில் Théo,
Isabelle கதாப்பாத்திரங்கள் மிகவும் கொடூரமானவர்கள்,அருவருப்பானவர்கள்.பாலியல் மற்றும் உளவியல் ரீதியாக ஒருவரை ஒருவர்
சவால் விட்டுக் கொள்ளக்கூடியவர்கள். இதற்குள் Matthew அவர்கள்
இருவரையும் மீளாய்வு செய்கிறான். பாரம்பரியமாக நாம் பார்த்துப்பழகிய சகோதரர்களை
விட போட்டியாளர்களாகவும் அன்யோன்யமாகவும் எவ்வித திரையற்றவர்களாகவும்
இருக்கிறார்கள். பிறருக்கு இது கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்றுதான் என்றால்
கேள்விக்குட்படுத்தி விடைதேட முயற்சிக்கலாம். என்னைப்பொறுத்தவரை இங்கே அனைத்தும்
புரிதலுடன் நிகழ்ந்தேறுகிறது. ஆக கேள்விகளுக்கு அவசியமேயில்லை.
அடுத்து சகோதரர்களுக்கிடையிலான மற்றும்
காதலர்களுக்கிடையிலான possessive மன நிலை பற்றிய புரிதலுக்கும் இங்கு
தெளிவு கிடைக்கும்.
நடிகை Eva Green இன்
அழகு மற்றும் நடிப்பு பற்றி புதிதாதக வர்ணிக்க ஒன்றுமே இல்லை.அவர் தான் இந்த
படத்தை நகர்த்திச்செல்லும் விசை.இன்னும் பிரதானமாக திரைக்கதையில் எழுதப்படாமல்
இருந்த ஒரு நிகழ்வு திரைப்படத்தில் காட்சியாக்கபட்டிருக்கிறது.ஒரு சமயம் Matthew
இன் அருகில் பேச வரும் போது Eva Green இன்
கூந்தலில் எதிர்பாராமல் தீப்பற்றும்.அதை பொருட்படுத்தாமல் அவர் அதனை தட்டி அணைத்து
விட்டு கடந்து செல்வார்.முகத்தில் கூட எந்தவித கலகமும் இருக்காது.அந்த சம்பவத்தை
அப்படியே காட்சிப்படுத்தி இருப்பார் இயக்குநர்.
வாழ்க்கை,காதல்,இருத்தலியல்கொள்கை (existentialism), அழகு,
பாலியல் உறவு என்பவற்றைக்கொண்டு திரைப்படத்தை மிகவும் அழகாகவும்
நேர்த்தியாகவும் உருவாக்கி உள்ளார் இயக்குநர். குறிப்பாக திரைப்பட விரும்பிகளாக
தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொருவரும் தவறவிடாமல் பார்க்க வேண்டிய ஒரு
படம்.
The Dreamers (2003
Drama/Romance)
Director :
BernardoBertolucci
Things to Come
தனிமை பற்றிய விவாதம் சபைக்கு வந்தால்
நிற்கவே இடம் இருக்காது.ஏதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் தனிமையின் தாக்கம்,
ஏக்கம் பல விடயங்களைக் கற்றுக்கொடுத்திருக்கும் அல்லது கொன்று
புதைத்திருக்கும்.
தனிமை இயற்கைக்கு மிக நெருக்கமானது.
அது நம் சுயத்தை நாமே ஆய்வு செய்ய வாய்ப்பளிக்கிறது. அதை கடக்கப்பழகிவிடுதல்
என்பது, "மரணத்தின் ஒரு பகுதியை ச்சுவைத்து
மீண்டெழுவது போல” எம்முள் ஞானத்தின் ஒளி சுடர் விட ஆரம்பிக்கும்.
தனிமையில் சதா உழன்று கொண்டிருப்பதும்,
அதிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொள்ள முயற்சி செய்வதும் உலக
நியதி.அதை மிக நுணுக்கமாகவும் நேர்த்தியாகவும் பேசும் படம் இது.
இன்னும் ஒன்று. பற்றற்று இருத்தல்தான்
வாழ்க்கையில் பிரதானமானது. மனித உறவுகளில் அதீத பற்றற்று இருத்தல் பற்றி என்னை
யோசிக்க வைத்தது இப்படம்.இன்னும் பல உணர்வுகளை இலக்கியப்போக்கில் பேசிச்செல்கிறது.
மோனிக்கா பெல்லூசியின் பின் என்னை
கடந்த சில நாட்களாக பிரம்மிக்கவைத்த நடிகைதான் இசபெல்லா (Isabelle
Huppert). The Piano Teacher திரைப்படத்தின் மூலம் மனதின் அடி ஆழத்தில்
இறங்கியவர். உடல் மொழி பற்றி இவரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.
கணவன் தன்னை விட்டு போகிறான் என்றதும்,அவருக்கே உரிய பாணியில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஒரு
வார்த்தை மூலம் நம் மனதை பிசைந்து விடுவார்.
“I thought you would Love me forever”
வழக்கமாக நம் சமூகத்தினருக்கான பெரிய
குறைதான் பெண்கள் ஏன் எப்போதும் உடலரசியலில் சார்ந்து மட்டுமே பேசுகிறார்கள்?
என்பது.அவர்களை எதன் பெயர் சொல்லி அடக்க முற்படுகின்றீர்களோ அதை
பேசுவது தானே நியாயமும் கூட.இருந்தாலும் இங்கு மாற்றாக மனதின் நுண்ணுணர்வுகளை
பேசும் இப்படம் இளம் பிரஞ்சுப் பெண் இயக்குனருடையது என்பது மிகச்சிறப்பு.
Things to Come (2016 Drama Film)
Director : MiaHansenLove
Thursday, August 31, 2017
உலகசினிமா அறிமுகக் குறிப்புகள்
Posted under உலகசினிமா, சினிமா on 10:51 AM by அத்தியா with
No comments
Like Someone In Love : 2012
“இந்த வயதில் இவ்வாறான ஆசையெல்லாம்
தேவையா ? என்று பொங்குபவர்கள் பொங்கட்டும்.நான்
சொல்லவந்ததை சொல்லி விட்டு போகிறேன்” என்றவாறு
இலக்கிய நயத்துடன் மிகவும் எளிமையாக, இன்னும்
மனித மனங்களில் ஆழமான தாக்கங்களைத் தோற்றுவிக்கும் கதையை இறுதியாக சொல்லி விட்டு
மறைந்தார் இயக்குநர் (Abbas
Kiarostami) அப்பாஸ்
கியரோஸ்தமி.
இதில்
வரும் காட்சி நுண்ணறிவு உண்மயிலேயே பிரம்மிக்க வைத்தது.”திரைப்படத்தில் நாம் ப்ரேமிற்குள் (Frame) பார்க்கும் விடயங்களை விட ப்ரேமிற்கு
வெளியில் நடக்கும் நம்மால் பார்க்க முடியாத விடங்கள் மிகவும் முக்கியமானது” என்பதை இத்திரைப்படத்தில் ஆரம்ப காட்சி
உணர்த்தியது.
திடீரென
ஏற்படும் பெயரற்ற உறவுகளின் அன்பு,கரிசனம்,புரிதல்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும்
அந்த உறவால் வெளியில் இருந்து ஏற்படும் சிக்கல்களுக்கு முகம் கொடுப்பதென்பது
சிரமானதுதான். வழக்கமான காதல் கதை ஒன்றுதான் வெறித்தனமாக பின் தொடர்ந்து வன்முறை
நிகழ்த்துகின்றது.
மிக
எளிமையான முகமூடிகளைக் கொண்டு மனதின் தீவிரமான சிக்கல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.
ஒவ்வொரு
சந்தேகமும் நியாயப்படுத்தப்படுகின்றது. இதயத்தின்
இருண்டபக்கத்தின் அழகு எந்தவித மாயத்தோற்றத்தையும் தராமல், இருந்தாலும் ஒரு சிறு மயக்கத்தையும்
இலக்கியத்திற்கான அழகையும் கொண்டு பேசுகிறது.
Like Someone
In Love (2012 ‧ Drama film)
Enter the Void : 2009
மரணத்திற்கு
பின்னரான வாழ்வு பற்றிய புரிதல் மதங்களின் நம்பிக்கையற்ற புராண கதைகளை விட போதை
தலைக்கேறிய தத்துவவாதிகள் சொல்வது அதீதமான சிலிர்ப்பை ஏற்படுத்தி
விடுகிறது.நிச்சயமாக தத்துவங்களைப் புறக்கணிக்கும் மனப்பான்மை மிகவும்
அரிது.மரணித்த பின் எம் ஆன்மா உடலை விட்டு எங்கு போகும்? என்ன செய்யும்? இதை ஒரு பரிசோதனையாகவே,போதை தலைக்கேறிய ஒருவனின் மரணத்தின்
பின்னரான அவனது ஆன்மாவின் பார்வையில் இருந்து அவனது உலகை நமக்கு காண்பிக்கிறது.
உலக
வாழ்வு பற்றிய முழுமையான புரிதலும் அனுபவமும் கிடைக்கின்ற போது இவ்வுலகிலி்ருந்து
சற்று ஆன்மாவை அப்புறப்படுத்திப்பார்க்க ஆசை வரலாம்.சில சமயம் "என்னடா
வாழ்க்கை இது?" என்று புரியாமல் புலம்புபவர்களுக்கும்
தோன்றலாம்.அந்தவகையில் ஆன்மாவின் ஒரு விடுதலைதான் போதைப்பாவனையாக
எனக்குத்தோன்றியது.பெரும்பாலான தத்துவதாதிகளின் இத்தகைய நிலையில் புதுமை ஒன்றும்
இருப்பதாக தெரியவில்லை.
ஒவ்வொரு
மனிதனின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ள ஒரு சிக்கலுக்கு தீர்வு காண முயற்சிக்கும்
செயற்பாடுதான் இயக்குனர் மேற்கொண்டது.ஆரம்பத்தில் "The Book of the Dead" என்னும் புத்தகத்தை வாசிக்குமாறு
தூண்டபடுவதும்,அதன் பின்னரான எதிர்பாராத மரணமும்
மரணத்தின் பின்னுள்ள ஆன்மாவின் தேடலும் என்றவாறு பயணிக்கும் இக்கதை ஆரம்பம் முதல்
முடிவு வரை நம்முள்ளே பொருத்தமான இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி நம்மை
ஏற்றுக்கொள்ளச்செய்திருக்கும்.அல்லது மரணத்தின் பின்னரான வாழ்க்கை தொடர்பாக
நாமாகவே ஒரு முடிவுக்கு வருமாறு சில கேள்விகளை தூண்டியிருக்கும்.
போதை
தலைக்கேறிய ஆஸ்கார் தான் சுடப்பட்டு விட்டான் என்பது தொடர்பாக பிரக்ஞையற்று இப்படி
கேட்பது என்னை கவர்ந்த ஒன்று.
“They shot
me. Did they kill me? Did they shoot me? I’m just tripping, that’s what it is.
It’s the DMT.”
இந்த
மரணத்தையும் தாண்டி ரசிக்க வைத்த காட்சி லிண்டா(Linda) ஆஸ்காரின் (Oscar
) அன்பு.
சகோதரர்களுக்கிடையிலான அன்பு நிலை கட்டுக்கடங்காமல் வெளிக்காட்டவே வேண்டிய
ஒன்று.அது வார்த்தைகளாலோ அல்லது முத்தங்களால்,கட்டியணைத்தல்களால்
பூரணப்படுத்த முயற்சி செய்யப்பட வேண்டும்.வழக்கமாக கேஸ்பர் நோ திரைப்படங்களில்
காதல் காம விடயங்கள் விதிமீறியிருக்கும்.அதை புறக்கணிக்க முடியாமல் தட்டுத்
தடுமாறி மனம் ஏற்றுக்கொள்ளும். அதே பதட்டத்தை இந்த சகோதரர்களின் அன்பு நிலையில்
ஏற்படுத்தி விட்டிருப்பார்.முக்கியமாக தனக்கு மட்டும்தான் சொந்தம் என்னும் மன நிலை
(possessive) இங்கு சகோதரர்களுக்கிடையில் மேலோட்டமாக
நிகழ்த்தப்பட்டிருக்கும்.
முடிந்தால்
நடிகனின் முகத்தை அவன் கண்ணாடியில் பார்க்கும் போது அவனுக்கே தெரியாமல் ஒரு முறை
நீங்களும் பார்த்து விடுங்கள்.
Enter the
Void 2009 ‧ Fantasy/Drama film
Shame : 2011
தனிமையின்
அந்தரங்கம் குறித்து யாருக்கும் எவ்வித
வியாக்கியானங்களும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
மூன்றாவது
நபர் நம் வாழ்வில் நுழையும் வரை, தன்னிச்சையான
நம் செயல்கள் குறித்து எவ்விதக் குற்றவுணர்வுக்குள்ளாக வேண்டியதுமில்லை. மூன்றாவது
நபர் நம்வாழ்வில் நுழையும்வரை, "வெட்கம்"
என்றால் என்ன? என்பது குறித்து எவ்வித பிரக்ஞையுமற்று
இருந்திருப்போம்.
நான்
அறிந்து சமூகத்தில் பாதிக்கு மேலானவர்கள் வாழ்க்கை "தனிமையில் அந்தரங்கம்
பேணியதாகவே" இருந்துவிடுகிறது. அது
வெளிக்கொணரப்படும் தனி மனித,சமூகத்தை பொறுத்து சரியும் தவறும்
நிர்ணயிக்கப்படுகிறது. இன்னும்
காதலற்ற வெறுமனே சதைகளின் மீதான ஆர்வம் ஒன்றும் இந்த உலகிற்கு புதுமையான
ஒன்றுமல்ல.
எந்தவொரு
வன்மமும் திணிப்பும் "பாலியல் உறவுச்செயற்பாட்டில்" இல்லாதவரை;இங்கு குற்றம் என்று எதுவுமே
இல்லை. வெட்கப்படவும் கூட ஒன்றும் இல்லை. ஏறத்தாழ
அண்மித்த வயதிலுள்ள இரத்த உறவுகளின் அன்பு நிலையும்,புரிதல்களற்ற புறக்கணிப்புகளும் என்றுமே நான் தேடிப்பார்த்து
அனுபவிக்கும் ஒன்று.
Shame (2011 ‧ Drama film/Erotic)
Director
Steve McQueen
Blue is the warmest color : 2013
திரையில்
என்றாலும் சரி. தெருவில்
என்றாலும் சரி. வன்முறை
காட்சிகளைப் பார்க்க தாராள மனம் இருக்கும் நமக்கு ஒருவர் மீது ஒருவர்
அன்பைப்பரிமாறிக் கொள்வதை காண சகிக்க முடிவதில்லையே..!
அவரவர்
உடல் அவரவர் உரிமை.அவரவர் பாலின தேர்வு கூட அவரவர் உரிமைதான்.மூன்றாம் நபரிடம்
உரிமை கேட்டு கோஷம் போட்டு அனுமதி கேட்க வேண்டிய அவசியமும் இல்லை என்றுதான்
சொல்வேன். அதே
வேளை "பிறர் வேறுபட்டு வாழ உடன்படும்" மன நிலையை கூட வளர்த்துக்கொள்ள
வேண்டும். வித்தியாசங்கள்
கண்டால் கல்லால் அடிக்கும் மன நிலை தமிழரை விட்டகல நாட்கள் பல செல்லும்.
நம்
சமூகத்தை பொறுத்த வரை, பெரும்பாலும் பாலியல் வரட்சியில்
இருக்கும் ஆண்கள் மன நிலை தான் இங்கு பரிதாபமென தோன்றுகின்றது. "நாங்கெல்லாம் என்ன பாவம் செய்தோம்?" என்ற புலம்பல் இந்த பெண்கள் பெண்களை
நாடிச் செல்வது குறித்து இருக்கிறது.
இருந்தாலும்
ஆண்கள் ஆண்களை நாடிச்செல்லுதல் தொடர்பான அதிர்வு,பிரமிப்பு பெண்களைவிட குறைவாகத்தான் உள்ளது.மூன்றாம் பாலினம்
குறித்து இங்கு யாருக்கும் எந்த கவலையும் இல்லை.
"தனக்கு மட்டுமே சொந்தம்" (Possessiveness) என்னும் உணர்வு இல்லாத காதல் எந்த
அளவுக்கு உயிர்ப்புடன் இருக்கும் என்பது பற்றிய விவாதம் முடிவுக்கு கொண்டுவரப்படாத
ஒன்றுதான்.
Blue is the
warmest color (2013)
Director
Abdellatif Kechiche
- அத்தியா -
- அத்தியா -












